74 வயது ஆசிரியை துஷ்பிரயோகம் செய்யப்பட்டுக் கொலை - கண்டியில் சம்பவம்
http://newsweligama.blogspot.com/2014/10/74.html
கண்டி பேராதனை கிரிபத்கும்புர பிரதேசத்தில் முன்பள்ளி (Nursery) ஆசிரியையை கொலை செய்த பாடசாலை மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்பள்ளி ஆசிரியையுடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியை திட்டியதால் ஆத்திரமடைந்த மாணவன், ஆசிரியையை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி பின்னர் கொலை செய்துள்ளார்.
74 வயதான ஆசிரியையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் 17 வயதுடைய மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து பேராதனை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.