கொஸ்லந்தை மண்சரிவினால் காணாமல் போனோர் தொகை 300 ஐத் தாண்டியது
http://newsweligama.blogspot.com/2014/10/300.html
இன்று காலை கொஸ்லந்தையில் இடம்பெற்ற மண்சரிவினால் காணாமல் போனோரின் எண்ணிக்கை 300 ஐத் தாண்டியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
தொடர்ந்தும் மண்சரிவு ஏற்படுவதால் குறித்த பிரதேசத்தைப் பார்வையிடச் செல்வதிலிருந்து பொது மக்கள் தவிர்ந்து கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.