கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்திற்கு அலுவலக உபகரணங்கள் வழங்கல்
http://newsweligama.blogspot.com/2014/10/blog-post_29.html
கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்திற்கு முன்னாள் அமைச்சரின் நிதியொதுக்கீட்டில் அலுவலக உபகரணங்கள் வழங்கல்
முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கௌரவ. அல்ஹாஜ். சட்டத்தரணி. எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்களின் நிதியொதுக்கீட்டில், கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்திற்கு மிக நீண்ட காலத் தேவையாகக் காணப்பட்டு வந்த அலுவலக உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நிறுவனத்தின் உப தலைவர் ஏ.எம்.எம். முர்ஷிதீன் தலைமையில் 2014.10.27ம்திகதி திங்கட்கிழமை மீராவோடையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு, பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கௌரவ. அல்ஹாஜ். சட்டத்தரணி. எம்.எஸ்.எஸ். அமீர் அலி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைத்தவிசாளர் கௌரவ. கே.பீ.எஸ். ஹமீட், அல்-கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க். எம்.எம்.எஸ் ஹாரூன் (ஸஹ்வி), கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஜனாப். எச்.எம்.எம். றுவைத், அல்-கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தின் செயலாளர் ஜனாப். ஐ.எம். றிஸ்வின் உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினரின் இணைப்பாளர்களான ஜனாப். எஸ்.எம். தௌபீக், ஜனாப். ஏ. அக்பர், கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் செயலாளர் எம்.ரீ.எம். ஹைதர் அலி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
உத்தியோகபூர்வமாகாக மாகாண சபை உறுப்பினர் அலுவலக உபகரணங்களை நிறுவனத்தின் நிருவாக சபையினரிடம் கையளித்தார்.
தகவல்
KCDA ஊடகப்பிரிவு