தூக்கிலிடப்பட்ட ரெய்ஹென்னா ஜாப்ரி விடயத்தில் இஸ்லாத்தை குறை கூற இடமில்லை..!!

இஸ்லாத்தை விமர்சிக்க எங்கே?சிறந்த தருணம் அமையப் போகிறது என ஏங்கி ஒப்பாரி வைத்து அலைந்து திருந்தோருக்குக் ஈரான் நாட்டில் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு தூக்கிலிடப்பட்ட ரெய்ஹென்னா ஜாப்ரி விடயம் மிகப் பெரிய பேசு பொருளாய் உருவெடுத்துள்ளது.

முதலில் ஒரு பெண் தன்னை கற்பழிக்க வருபவனை இஸ்லாமிய அடிப்படையில் தாக்கலாமா?எனப் பார்ப்போம்.

மேலும்,அவர்களே உங்களிடம் முதலில் ஆரம்பித்துள்ள நிலையில் (நீங்கள் போரிட வேண்டாமா?) (அல்குர்ஆன் 9:13) என அல்-குர்ஆன் எம்மைப் பார்த்து கேள்வி எழுப்புகிறது.

எனவே,நமக்கெதிரான அநீதிகளை எதிரிகள் கட்டவிழ்த்து விட்டால் அதற்கெதிராக போராடுவதில் இஸ்லாத்தில் எக் குற்றமும் இல்லை என்பதை இவ் வசனம் தெளிவாக்குகிறது.

பலவீனமான ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் 'எங்கள் இறைவா! இந்த அக்கிரமக்கார ஊரிலிருந்து எங்களை வெளியேற்றி விடுவாயாக! உன் புறத்திலிருந்து ஒரு பொறுப்பானவரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன் புறத்திலிருந்து ஒரு உதவியாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! என்று கூறிக் கொண்டுள்ள நிலையில் அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன வந்து விட்டது. (அல்குர்ஆன் 4:75)

இவ் வசனத்தின் எமது பலவீனமான ஆண்களினதும், பெண்களினதும், சிறுவர்களினதும் பாத்காப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது அதற்கு எதிராய் போராடுங்கள் என அல்லாஹ் எமக்கு கட்டளை பிறப்பிக்கின்றான்.

பலவீனமான ஆண்கள்,பெண்கள்,சிறுவர்களினது பாதுகாபிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது பலமுள்ள ஆண்களை போராட அல்லாஹ் கட்டளை பிறப்பித்திருப்பதானது அநீதியைத் தட்டிக் கேட்க அல்லாஹ் அனுமதி வழங்கியுள்ளான் என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.இது அநீதிக்கெதிராக யுத்தம் செய்ய ஏவும் வசனமாதலால் யுத்தத்தின் போது போரிடுவோரைக் கொல்வது குற்றமாகப் போவதில்லை.

எனவே, இதனடிப்படையில் இவ் விடயத்தை எடுத்து நோக்கினால் அப் பெண் உண்மையில் அந் நபர் கற்பழிக்க எத்தனிக்கும் போது கொலை செய்திருப்பின் அது குற்றம் ஆகப் போவதில்லை என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இன்று இவ் உலகில் ஒரு பெண்ணைக் கற்பழிக்க முயன்றவனை அப் பெண் கொல்லும் போது எம் உலகச் சட்டங்கள் எவ்வாறு இருக்கின்றது என்பது எனக்குத் தெரியாது.எனினும் இஸ்லாம்,இவ் விடயத்தில் யாவரும் மனதாராய் ஏற்கின்ற தெளிவான நீதியையே உலகிற்கு சொல்லி நிற்கிறது என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

அப்படி என்றால் ஈரானிய நீதி மன்றம் விதித்த தீர்ப்பு பிழையா?என்ற வினா எழலாம்.

"கற்பழிக்க முயன்றவைக் கொன்ற பெண்ணிற்கு தூக்கு" என கற்பழிக்க முயற்சித்த போதுதான் அப் பெண் அந் நபரைக் கொன்றார் என ஆதார பூர்வமான உறுதிப்படுத்தப் பட்ட ஒரு செய்தி போன்றே நாம் உண்மையில் இச் செய்தியைப் பெற்றோம். இதுவே அப் பெண்ணின் மீது உலகப் பார்வை திரும்பவும் காராணமானது.அப் பெண்ணை அந் நபர் கற்பழிக்க முயலும் போதுதான் அப் பெண் கொலை செய்தார் என்பதற்கு ஆதாரம் என்ன?எதுவுமே இல்லை.அப் பெண் "என்னைக் கற்பழிக்க வந்தவனை தான் நான் கொலை செய்தேன்"எனும் போது உலகத்தின் பார்வையே அப் பெண்ணின் பக்கம் திரும்பியது.அவ் ஆணை யாராவது சிந்திதீரா?இப் பெண் அந் நபர் மீது ஏன் அபாண்டத்தை சுமத்தியிருக்கக் கூடாது?நான் அப் பெண்ணை குற்ற வாளி எனவும் இல்லை.அந் நபரை குற்ற வாளி எனவும் இல்லை.ஆனால்,அப் பெண்ணின் பக்கம் மாத்திரம் எது வித ஆதாரமும் இன்றி உண்மை இருப்பதாக உலகம் நம்புவது அறிவுடமையல்ல.

மரணித்த அந் நபர் ஒரு உளவாளி என்பதால் அப் பெண் அந் நபரை தான் ஏன்?கொலை செய்தேன் என்ற இரகசியத்தை வெளிப்படுத்தாமல் மறைக்கக் கூட இவ் கற்பழிப்பை அரங்கேற்றி இருகலாமல்லவா?

கற்பழிக்க முயற்சித்த போதுதான் அப் பெண் அந் நபரைக் கொன்றார் என்பதற்கு எது வித ஆதாரமுமின்றி அப்பெண் அந் நபரைக் கொன்றது உறுதிப் படுத்தப்பட்டால் அது ஈரான் நாட்டில் அல்ல இலங்கை என்றாலும்,இந்தியா என்றாலும் ஒரு கொலை செய்தவருக்கு என்ன தண்டனை அந் நாட்டில் வழங்கப் படுமோ அந்த தண்டனை தான் வழங்கப்பட்டிருக்கும்.

அப் பெண் உண்மையில் ஒரு ஆணைக் கொலை செய்து தூக்குத் தண்டனை வழங்கப் பட்டிருந்தாலும் இது ஒரு போதும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாக அமையப் போவதில்லை.ஒரு ஆண் ஒரு நபரைக் கொன்றாலும் அவ் ஆணிற்கு கொலைக்குக் கொலையையே இஸ்லாம் தண்டனையாக கூறுகிறது.எனவே,இது இஸ்லாமிய ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு எனக் கூக்குரல் இடுபவர்கள் சிந்தனை அற்றவர்கள் என்று தான் கூற வேண்டும்.

எனவே,இவ் விடயத்தினை வைத்து இஸ்லாத்தில் சேறு பூச விளைவது அறிவுடமையல்ல. "சூரியனை கையால் மறைப்பார் இல்"இதனைப் போன்றே இஸ்லாத்தின் ஒளியையும் கையால் மறைப்பார் இல்.யார் எப்படி அதன் ஒளியை மறைத்து விட முயற்சித்தாலும் அது அவர்களுக்கு தோல்வியாகவே அமையும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை
இலங்கை

Related

Popular 6111752777105090062

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item