யூனுஸ்கானும், மிஸ்பாவும் வேண்டவே வேண்டாம்: போர்க்கொடி தூக்கும் யூசுப்
http://newsweligama.blogspot.com/2014/10/blog-post_4.html
உலகக்கிண்ண போட்டியில் யூனுஸ்கானும், மிஸ்பாவும் இடம்பெறக் கூடாது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் யூசுப் கூறியுள்ளார்.
11வது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடத்தப்படுகிறது. இந்தப்போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ம் திகதி முதல் மார்ச் 29ம் திகதி வரை நடக்கிறது.
2015–ம் ஆண்டுக்கான இந்த உலகக்கிண்ண போட்டியில் தற்போதைய பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா–உல்–ஹக்கும், யூனுஸ்கானும் இடம் பெறக்கூடாது என்று பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர் முகமது யூசுப் கருத்து தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, 2011ம் ஆண்டு மொகாலியில் நடந்த உலகக்கிண்ண போட்டியின் அரை இறுதியில் இந்தியாவிடம் தோற்றதற்கு யூனுஸ்கான், மிஸ்பாவின் மோசமான துடுப்பாட்டம் தான் காரணம்.
அவர்களது துடுப்பாட்டம் மிகுந்த ஏமாற்றம் அளித்தது. சூழ்நிலைக்கு தகுந்தவாறு இருவரும் விளையாடவில்லை.
இந்த இருவரும் 2015–ம் ஆண்டு நடைபெறும் உலகக்கிண்ண போட்டியில் இடம் பெறக்கூடாது.
இந்த இருவரையும் உலகக்கிண்ண அணியில் சேர்க்கக் கூடாது என்று தெரிவு குழுவிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் வலியுறுத்த வேண்டும். இளம் வீரர்களை உலகக்கிண்ண அணியில் தெரிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.