தாயின் தலையை துண்டித்து வீதியில் எட்டி உதைத்த நபர்! ரயிலில் பாய்ந்து தற்கொலை (வீடியோ)
http://newsweligama.blogspot.com/2014/10/blog-post_52.html
அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் தனது தாயின் தலையை துண்டித்ததுடன் எட்டி உதைத்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்றிரவு நபர் ஒருவர் 60 வயது மதிக்கத்தக்க தனது தாயின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளதுடன், எட்டி உதைத்துள்ளார்.
இதனை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
கொலை நடந்த அடுத்த சில நிமிடங்களில் இரயில் அடிபட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார், தற்கொலை செய்து கொண்ட நபர் தாயின் மகனாக இருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.
அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை செய்த நபர் மனநிலை சரியில்லாதவரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.