குருனாகல் பொது பல சேனாக் காரியாலயம் முஸ்லிம் ஒருவரது வீட்டில்...

குருனாகல் கண்டி வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான வீடொன்றிலேயே பொது பல சேனாவின் குருனாகல் மாவட்டக் காரியாலயம் இவ்வளவு காலமும் இயங்கிவருகின்றது. 25 வருடங்களுக்கு முன்னர் குறித்த வீட்டினை சிங்களவர் ஒருவருக்கு வாடகைக்குக் கொடுத்ததில் இருந்து இவ்வீடு சம்பந்தமான வழக்கொன்று இடம்பெற்று வந்தது.

இதனடிப்படையில் வழக்கின் தீர்ப்பு முஸ்லிம் நபருக்குச் சாதகமாக அமைந்ததை அடுத்து அதிகாரிகள் முஸ்லிம் நபருக்கு வீட்டினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அங்கிருந்த தளபாடங்களை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனினும் அங்கு முச்சக்கர வண்டிகளில் வந்த தேரர்கள் குழு ஒன்று இந்த நடவடிக்கையை எதிர்த்து பிரச்சினை செய்துள்ளனர். இதனால் குறித்த வீட்டை இதுவரை முஸ்லிம் நபருக்குப் பெற்றுக் கொடுக்க முடியாத நிலை தோன்றியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிகின்றன.

Related

உள் நாடு 8070489579889495480

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item