தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் அமீர் அலி!
http://newsweligama.blogspot.com/2014/12/blog-post_25.html
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வரின் இராஜினாமாவைத் தொடர்ந்து ஏற்பட்ட தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர் அலிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இன்றைய தினம் அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசினால் கிழக்கு மாகாண சபையில் ஏற்படுத்தப்பட்ட பிரளயத்தின் விளைவின் பின்னணியில் அவசர அவசரமாக இம்முடிவு மேற்கொள்ளப்பட்டு ஜனாதிபதியின் வேண்டுகோளில் ஏ.எச்.எம் அஸ்வர் பதவியை விட்டுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.