ஜனாதிபதி இன்று வெலிகம விஜயம்; முஸ்லிம்களுடன் சந்திப்பு
http://newsweligama.blogspot.com/2014/12/blog-post_12.html
பிற்பகல் 5.30 மணியளவில் வெலிகம நகர சபைத் தலைவர் ஹுஸைன் முஹம்மதுவின் தலைமையில் நடைபெறும் முஸ்லிம்களுடனான கலந்துரையாடலில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார். இச்சந்திப்பு நகர சபைத் தலைவரின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.
இதில் உலமாக்கள் கல்விமான்கள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். இதனைத் தொடர்ந்து வெலிகம ஹல்லல பகுதியில் மக்கள் சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- தினகரன்