10 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் விரைவில் குறைப்பு - 29ம் இடைக்கால வரவு செலவுத்திட்டம்
http://newsweligama.blogspot.com/2015/01/10-29.html
10 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 29ம் திகதி பத்து அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட உள்ளது.
நாட்டின் நிதி நிலைமை குறித்து அறிக்கை ஒன்றை கோரியுள்ளேன்.
இது வரை காலமும் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து பொய்யான பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது.
உண்மை நிலைமை குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
மக்களுக்கு மிகவும் அவசியமான பத்து பண்டங்களின் விலைகள் குறைக்கப்படும் என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சின் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இடைக்கால வரவு - செலவுத் திட்டம் ஜனவரி 29 இல் சமர்ப்பிக்கப்படவுள்ளது
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசின் இடைக்கால வரவு - செலவுத் திட்டம் ஜனவரி 29 ம் திகித நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
தனது அமைச்சின் கடமைகளை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போது,
புதிய அரசாங்கத்தின் பிரதான நோக்கம் நாட்டு மக்களின் நலனில் அக்கறையுடன் செயற்படுவதுடன் அவர்களது அபிலாஷைகளை நிறைவேற்றுவதே. வெளிநாட்டு முதலீடுகள், வரி வருமானங்கள் மூலம் முறையான நிர்வாகத்தைச் செயற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே அரசின் முக்கிய குறிக்கோள்.
திறந்த பொருளாதாரக் கொள்கையுடன் நாம் நாட்டைக் கட்டியெழுப்பும் அதேவேளை, உள்ளூர் உற்பத்தியாளர்களையும் ஊக்குவிப்போம் என தெரிவித்துள்ளார்.