சுயாதீனத் தொலைக்காட்சிக்கு மகிந்த 11 கோடி ரூபா கடன்
http://newsweligama.blogspot.com/2015/01/11.html
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விளம்பரங்கள் ஒன்றரை மாதமாக சுயாதீன தொலைக்காட்சியில் கட்டணம் செலுத்தாமலே காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக சுயாதீன தொலைக்காட்சியின் ஜ.தே.கட்சி ஊழியர்கள் தொழிற் சங்கம் தெரிவிக்கின்றது.
தேர்தல் காலத்தில் காட்சிப்படுத்திய விளம்பரச் செலவு 11 கோடி ரூபாவாகும். இந் நிதியை அவர்களிடமிருந்து சுயாதீன தொலைக்காட்சிக்கு பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. புதிய ஊடக அமைச்சர் இதனை ஒரு கமிசன் ஒன்றை நியமித்து இந் நிதியைப் பெற்றுத்தரல்வேண்டும்.
அத்துடன் கால்டன் ஸ்போட் தொலைக்காட்சி சுயாதீன தொலைக்காட்சியில் ஆங்கில தொலைக்காட்சியான “பிரைம் ரீ.வி” என ஆரம்பிக்கப்பட்டது.
அத் தொலைக்காட்சி சனலையே முன்னாள் ஜனாதிபதியின் மகன் ஜோசித்த ராஜபக்ச எடுத்து கால்டன் ஸ்போட் சனல் என நடத்துகின்றார்.
நாட்டின் நாலா பாகத்திலும் உள்ள சுயாதீன தொலைக்காட்சியின் அன்டனாக்களையும் சீ.எஸ்.எம் தொலைக்காட்சி பெற்றுக் கொண்டுள்ளனர். எனவும் ஊழியர் தொழிற்சங்கம் தெரிவிக்கின்றது.