சுதந்திர தின நிகழ்வு வீரக்கெட்டியவில் இருந்து கொழும்புக்கு மாற்றம்
http://newsweligama.blogspot.com/2015/01/blog-post_26.html
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சொந்த ஊரான வீரகெட்டியவில் நடத்த ஏற்பாடாகியிருந்த தேசிய சுதந்திர தினம் அங்கு இடம்பெறாது என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சொந்த ஊரான வீரகெட்டியவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் திகதி தேசிய சுதந்திர தின விழாவின் பிரதான நிகழ்வு நடாத்தப்படவிருந்தது. அதற்கான முன் ஆயத்தப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
எனினும், கடந்த 8ம் திகதி ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வியைத் தழுவியதனைத் தொடர்ந்து, சுதந்திர தின நிகழ்வுகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு பாராளுமன்ற மைதானத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
செலவுகளை குறைக்கும் நோக்கில் இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் அறிவித்துள்ளார். எளிமையான முறையில் இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.