நாமல் ராஜபக்சவுக்கு கொலை மிரட்டல்?
http://newsweligama.blogspot.com/2015/01/blog-post_34.html
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசியலிலிருந்து விலகிக் கொள்ளுமாறு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தங்காலை பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை உறுதி செய்துள்ளார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12. 00 முதல் 12.40 வரையில் தொலைபேசி மூலம் இவ்வாறு மிரட்டல் விடுக்கப்பட்டது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சுமார் நாற்பது நிமிடங்கள் அரசியலை விட்டு விலகிச் செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.