சபாநாயகராக சமல் ராஜபக்ச தொடர்ந்தும் நீடிப்பார்
http://newsweligama.blogspot.com/2015/01/blog-post_56.html
நாடாளுமன்றின் சபாநாயகராக சமல் ராஜபக்ச தொடர்ந்தும் நீடிப்பார் என தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றின் ஏனைய பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ள போதிலும் சபாநாயகர் பதவியில் மாற்றமில்லை.
சபாநாயகராக சமல் ராஜபக்ச தொடர்ந்தும் பதவியில் நீடிப்பதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் இந்தப் பிரதி சபாநாயகர் பதவிக்காக மாத்தறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவைத் தலைவர் மற்றும் ஆளும் கட்சியின் பிரதம கொறடா போன்ற பதவிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
எதிர்வரும் 20ம் திகதி இந்த பதவி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.