ஜனாதிபதி மைத்ரியின் பேனர்களையும் கட்டவுட்களையும் அப்புறப்படுத்தவும் - ஜனாதிபதி செயலகம்
http://newsweligama.blogspot.com/2015/01/blog-post_6.html
President orders removal of cut-outs
நாட்டின் பல பாகங்களிலும் காட்சிப்படுத்தபட்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் கட்டவுட் மற்றும் பேனர்களை உடன் அகற்றுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவுறுத்தலில் நாடுதழுவிய ரீதியில் காட்சிப்படுத்தபட்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் கட்டவுட் மற்றும் பேனர்களை உடன் அகற்றுமாறும் வரும் காலங்களில் ஜனாதிபதியின் கட்டவுட் பேனர்களை காட்சிப்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது.