பொதுபல சேனா அமைப்பை தடை செய்யுமாறு கோரிக்கை
http://newsweligama.blogspot.com/2015/01/blog-post_16.html
BBS Should Be Banned
பொதுபல சேனா அமைப்பு இனங்களுக்கு இடையில் ஒற்றுமையின்மையை தோற்றுவிப்பதாக சிற்றுண்டிச்சாலை ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
மருதானையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள மக்கள் பற்றி பேசி சிங்கள மக்களின் ரத்தத்தை சூடேற்றி அதன் ஊடாக மஹிந்த ராபஜக்சவை வெற்றியீட்டச் செய்ய பொதுபல சேனா முயற்சித்தது.
இந்த முயற்சியினால் சிங்கள மக்கள் சர்வதேசத்தின் முன்னிலையில் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் உண்மையான சிங்கள பௌத்தர்கள் தோல்வியடையவில்லை.
சரியான சிங்கள பௌத்தர்கள் மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்துள்ளனர்.
எனினும் பொதுபல சேனா அமைப்பு தோல்வியைத் தழுவியுள்ளது.
பேருவளை, அளுத்கம சம்பவங்களுக்கு பொதுபல சேனா பொறுப்பு சொல்ல வேண்டும்.
ஹைட் மைதானத்தில் நடைபெற்ற பொதுபல சேனாவின் மாநாட்டுக்கு பெருந்தொகை பணம் செலவிடப்பட்டது. இந்தப்பணம் எங்கிருந்து கிடைக்கப்பெற்றது.
பொதுபல சேனாவின் சில பௌத்த தேரர்களின் வாகன சாரதிகளாக இராணுவப் படையினர் கடமையாற்றியதாகத் தெரிவித்துள்ளார்.