ஊவா மாகாணசபை முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொள்ள ஆயத்தமாகும் ஹரின்
http://newsweligama.blogspot.com/2015/01/blog-post_60.html
ஊவா மாகாணசபையின் முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்னாண்டோ ஆயத்தமாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஊவா மாகாணசபையின் கூடுதல் அதிகாரம் எதிர்க்கட்சிகளுக்கு உண்டு ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்hளர்.
ஊவா மாகாண ஆளுனர் நந்த மெத்யூவிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கூடுதலான உறுப்பினர்க்ள எதிர்க்கட்சிக்கு ஆதரவளித்து வருவதாகவும் ஆட்சி அதிகாரத்தை அமைக்க இடமளிக்குமாறும் கோரி ஹரின் கடிதமொன்றை ஒப்படைத்துள்ளார்.
இன்று இந்தக் கடித்ததை ஹரின் பெர்னாண்டோ, ஆளுனரிடம் ஒப்படைத்துள்ளார்.
ஊவா மாகாணசபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் திஸ்ஸ ஹெட்டியாரச்சி மீண்டும் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது திஸ்ஸ ஹெட்டியாரச்சி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்திருந்தார்.
தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதாக அறிவித்துள்ளார்.