மெஸ்ஸியை பின்னுக்குத் தள்ளி தங்கப்பந்தை தட்டிச்சென்ற ரொனால்டோ
http://newsweligama.blogspot.com/2015/01/blog-post_98.html
உலகின் மிகச்சிறந்த உதைப்பந்தாட்ட வீரருக்கான பலோன் டிஓ விருதை போர்த்துக்கல் அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றார்.
கடந்த 1991 முதல் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கால்பந்து வீரருக்கான விருது வழங்கப்படுகிறது.
வீரர்கள் திறமை அடிப்படையில் 209 சர்வதேச அணிகளின் அணித்தலைவர், பயிற்சியாளர்கள் மற்றும் உலகம் முழுவதிலும் இருக்கும் பத்திரிகையாளர்கள் அளிக்கும் ஓட்டு பதிவு அடிப்படையில், சிறந்த வீரர் தெரிவு செய்யப்படுவார்.
கடந்த 2009 முதல் 2012 வரை என, தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள், அர்ஜென்டினாவின் மெஸ்ஸி, இவ்விருதை வென்றிருந்தார்.
கடந்த ஆண்டு (2013) இவ்விருதை இவரிடமிருந்து போர்த்துக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தட்டிச்சென்றார்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விருதுக்கு அர்ஜென்டினாடிவின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி (பார்சிலோனா), போர்த்துக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (ரியல் மாட்ரிட்), உலக கிண்ணம் வென்ற ஜேர்மனி அணியின் கோல்கீப்பர் மானுவல் நேயூர் (பேயர்ன் முனிக்) என, மூன்று வீரர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
இதில் மொத்த ஓட்டில் 37.66 % வாக்குகளை பெற்று முதலிடம் பெற்ற ரொனால்டோ, 2014ம் ஆண்டின் சிறந்த வீரருக்கான தங்கப்பந்து விருதை தொடர்ந்து இரண்டாவது முறையாக தட்டிச் சென்றார்.