பொது பல சேனா வரம்பு மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
http://newsweligama.blogspot.com/2015/01/blog-post_63.html
பொது பல சேனா அமைப்பு கடந்த காலங்கள் போன்று வரம்பு மீறிச் செயற்பட்டால் தராதரம் பாராது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பொது பல சேனா பற்றிய உங்களது நிலைப்பாடு என்ன என்று இணையத்தளம் ஒன்று அவரிடம் கேட்ட போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
அத்துடன் மஹிந்த ராஜபக்ச பொது பல சேனாவின் கீழ்த்தரமான நடவடிக்கைகளாலேயே முஸ்லிம்களின் வாக்குகளை இழக்க நேரிட்டு தோல்வியைத் தழுவினார் என முன்னாள் அமைச்சர் திலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.