மகிந்த தோல்வியடையப்போவது தெரிந்தும் பயத்தில் சொல்லவில்லை - சோதிடர் சுமனதாஸ

ராஜபக்ச தோல்வியடைவார் என்பது எனக்கு தெரிந்திருந்தது என அவரின் ஆஸ்தான ஜோதிடர் சுமனதாச அபயகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நொஸ்டிரடம்சின் அனைத்து எதிர்வுகூறல்களும் பலித்ததில்லை,மகிந்த ராஜபக்ச வெற்றிபெறுவதற்கு என்னால் முடிந்தளவிற்கே உதவமுடியும்,ஐந்து வீதமென தெரிவிக்கலாம்,ஆனால் ஜனாதிபதியாவதற்கு உங்களுக்கு அதிர்ஸ்டம் அவசியம்,

தற்போதைய நிலையில் நான் மக்களை சந்திப்பதை தவிர்க்கிறேன், குறிப்பாக ஊடகங்களை, என்னை நம்பும் பெருமளவானவர்கள் இந்த தோல்வி காரணமாக என்னை கைவிடமாட்டார்கள் என எதிர்பார்க்கிறேன்.

அவர் தோல்வியடைவது தெரியவந்ததும், அவரை ஆறுதல் படுத்தினேன், அவர் பதவிவிலகியதும் நானும் எனக்கு அளிக்கப்பட்டிருந்த மாளிகை, கார் உட்பட அனைத்து ஆடம்பர வசதிகளையும் கையளித்துவிட்டேன்,

ராஜபக்ச தோல்வியடைவார் என்பது எனக்கு தெரிந்திருந்தது, ஆனால் அதனை தெரிவிக்க எனக்கு மனமிருக்கவில்லை. அவர் வெல்ல மாட்டார் என நான் தெரிவித்திருந்தால் அவர் உளவியல்ரீதீயாக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பார், அவரது தோல்வி இதனை விட மோசமானதாக மாறியிருக்கும்,

ராஜபக்சவின் ஜாதகத்தை விட மைத்திரிபாலவின் ஜாதகம் வலுவானதாக காணப்பட்டது. என அவர் தெரிவித்துள்ளார்.

Related

உள் நாடு 6959157068209904376

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item