பாதுகாப்பு செயலாளராக B.M.U.D பஸ்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்
http://newsweligama.blogspot.com/2015/01/bmud.html
பாதுகாப்பு செயலாளராக இதுவரை பணியாற்றி வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சவின் பதவி பறிக்கப்பட்டு அந்த இடத்திற்கு சுற்றாடற்துறை அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய வந்த B.M.U.D பஸ்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்தும் ஜனாதிபதி மைத்ரிபாலவின் நேரடி நிர்வாகத்திலேயே பாதுகாப்பு அமைச்சு இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் முன்னர் நாம் வெளியிட்டிருந்த தகவலுக்கமைய பாதுகாப்பு செயலாளராக பஸ்நாயக்கவும் ஜனாதிபதி செயலாளராக அபயகோனும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மைத்ரி ஆட்சியில் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்படலாம் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இந்நியமனம் இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.