KP VIP பகுதி ஊடாக அனுப்பப்பட்டுள்ளார் - ராஜித
http://newsweligama.blogspot.com/2015/01/kp-vip.html
விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்போதைய தலைவர் கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தேர்தலுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்பதாக முக்கிய பிரமுகர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் வி.ஐ.பி. பகுதியூடாக வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் முன்னாள் அமைச்ச்ர் ராஜித சேனாரத்ன.
எதிரணி தேர்தலில் வெற்றி பெற்றால் கே.பி மீது விசாரணை நடாத்தப்படும் என தேர்தல் பிரச்சாரங்களின் போது தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் பெரும்பாலும் ஆறாம் திகதியளவில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இது தொடர்பான விசாரணைகளை அரசு முன்னெடுத்து வருவதாகவும் தற்போது அவர் எங்கிருக்கிறார் போன்ற விபரங்கள் தெரியாது எனவும் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.