பெண்களை மரியாதையாக நடத்தும் நாடுகளில் ஐக்கிய அரபு இராச்சியம் உலகளவில் முதலிடம்
http://newsweligama.blogspot.com/2014/04/blog-post_2088.html
பெண்களை மரியாதையாக நடத்தும் நாடுகளில் மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு அரபு இராச்சியம் முதலிடத்தினைப் பெற்றுள்ளது.132 நாடுகளிடையிலான வளர்ச்சி மற்றும் நலன்புரி ஒப்பீட்டு ஆய்வினை மேற்கொண்ட உலக பொருளாதார அமைப்பின் உலகளாவிய செயற்திட்ட சபையே இத்தகவலினை வெளியிட்டுள்ளது.
'நாங்கள் பெண்களை மதிக்கிறோம். நாட்டின் முக்கிய பங்களார்களான பெண்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாயங்களை மதிக்கிறோம். பல்வேறு துறைகளில் ஆண்களை விட அதிகமாக பெண்களால் பங்களிப்புச் செய்ய முடிகின்றது. ஐக்கிய அரபு இராச்சிய சமூகம் பெண்களின் சக்தியினை முழுமையாக அடைவதற்கு உதவி புரிகின்றது' என துணை ஜனாதிபதியும் அமைச்சருமான ஷேக் மொஹமட் பின் ரஷித் அல் மக்தூம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 54 அளவீடுகளை கொண்டு மேற்கொள்ளப்பட் மொத்த சமூக வளர்ச்சி சுட்டியில் மத்திய கிழக்கு நாடுகளில் முதல் இடத்தினைப் பெற்றுள்ள ஐக்கிய அரபு இராச்சியம் உலகளவில் 37ஆவது இடத்தினைப் பெற்றுள்ளது.