“மீண்டும் புலி உறுமல்”: யாழில் சுவரொட்டிகள்
http://newsweligama.blogspot.com/2014/05/blog-post_958.html
யாழ். குடாநாட்டின் புறநகர்ப்பகுதியில் இன்று மாலையில் இனந்தெரியாத நபர்களினால் ஒட்டப்பட்டிருந்த துண்டுப்பிரசுரத்தினைக் கண்ணுற்று மக்கள் பீதியில் உறைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களை மக்கள் அறிய முற்பட்டபோதிலும், அச்சத்தால் அருகில் செல்வதை தவிர்த்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், சில மணிநேரங்களின் பின்னர் குறித்த சுவரொட்டிகள் அகற்றப்பட்டிருந்ததாக அவதானித்தவர்கள் குறிப்பிட்டனர்.