அட்டாளைச்சேனை பிரதேச அரச சார்பற்ற மற்றும் பொது அமைப்புக்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் (படங்கள்)
http://newsweligama.blogspot.com/2014/05/blog-post_7815.html
(எம்.ஜே.எம். முஜாஹித்)
பொது அமைப்புக்களின் தலைமைப் பொறுப்புக்களை கொண்டுள்ளவர்கள் நம்பிக்கையுடனும், விசுவாசத்துடனும் நேர்மையுடனும் மக்களுக்கு சமூகசேவை செய்ய வேண்டும் என அம்பாறை மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எல். தௌபீக் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச அரச சார்பற்ற மற்றும் பொது அமைப்புக்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் இணைப்பாளர் எம். இர்பான் தலைமையில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரச சார்பற்ற அமைப்பின் இணைப்பாளர் பபுசுல் அமீன், சமூக சேவை உத்தியோகத்தர் எம்.ஐ. ஹாசீம், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். ஜாபிர் உட்பட உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மக்களுக்கு மக்களின் தலைவர்கள் பொது சேவை செய்ய வேண்டும் என்பது தொடர்பான விளக்கம் இக்கூட்டத்தில் பிரிவாக வழங்கப்பட்டது. 100க்கு மேற்பட்ட அமைப்புக்களின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்.