பொதுபல சேனா போத்தலுக்குள்ளிருந்து வந்த பூதம் போன்றது

-கிஷாலி பித்து ஜயவர்தன-

தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் அரசாங்கப் படையினருக்குமிடையே நீண்ட காலமாக நிலவி வந்த யுத்த நிலைமையில் கூட, அரசாங்கப் பாதுகாப்புடனான காவியுடைதரித்த குழுவொன்றினால் இனவாதம் மற்றும் இனவெறி இவ்வாறு பகிரங்கமாக விதைக்கப்பட்ட துர்ப்பாக்கிய காலகட்டமொன்று இருக்கவில்லை.

அவ்வாறான காலங்களில் பள்ளிவாசல்களை தாக்கவில்லை. கோயில்களை கொள்ளையிட்டது கிடையாது. முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதத்தவர்களுக்கு எதிராக பொதுபலசேனா போன்ற குழுவினர் பகிரங்கமாக தம்பட்டமடிக்கவுமில்லை. என்ன ஆச்சரியமெனில் இவ்வாறான பைத்தியக்காரர்களின் பைத்தியக்காரச் செயல்கள் வெளிப்பட்டது யுத்தம் முடிவடைந்ததன் பின்பாகும். இப்போது இவ்வாறான பைத்தியக்காரர்களுக்கெதிராக செயற்படும் உண்மையான பௌத்த தேரர்களுக்குக் கூட அவர்களிடமிருந்து மீள முடியாதுள்ளது.

ஜெனீவா வாக்கெடுப்பையொட்டி சிறிது காலம் அமைதி காத்துவந்த பொதுபலசேனா கடந்த வாரம் போத்தலொன்றுக்குள்ளிருந்து விடுவிக்கப்பட்ட பூதமொன்றினைப் போன்றதொரு நிலை தெளிவாகிறது. எனினும் ஜெனீவாவில், நாட்டில் வாழ்ந்து வருகின்ற சிறுபான்;மை மதத்தவர்களுக்கு கடும் போக்காளர்களினால் எந்தவித அச்சுறுத்தல்களும் இடம்பெறுவதில்லையென அரசாங்கம் வாய் நிரம்பக் கூறியது. மத சுதந்திரத்திற்கான உரிமை எமது அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அங்கு கூறியது உலகை சிரிப்பூட்டுவதற்காகும். பிரசாரம், பொய் போன்ற மூடி மறைப்புக்களால் பாவச் செயல்களை மறைப்பதற்கு முயற்சித்த அரசாங்கத்தின் பெரிய ஊடக இயந்திரம் தற்போது மெதுவாகவெனினும் நிலையாகவே அந்த செயற்பாட்டில் தோல்வி கண்டுள்ளது.

பொதுபலசேனாவின் தேரர்கள், சட்டத்தின் எந்தவொரு தண்டனைக்கும் உட்படாது சிறுபான்மை மதத்தவர்களுக்கெதிராக சண்டாளத்தனம் புரிகின்ற போது நாட்டில் அனைத்து மதங்களும் சுதந்திரம் உள்ளதாகக் கூறுவது வேடிக்கையானதாகும். கடந்த வாரம் பொதுபலசேனாவின் தேரர் மற்றொரு தேரருக்கு அச்சுறுத்தல் விடுக்கின்ற சந்தர்பத்தில்கூட, இரண்டாவதாகக் குறிப்பிட்ட தேரரது பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பொலிஸார் அவ்விடத்தில் இருந்த போதிலும் கூட முடியாது போயுள்ளது. இச்சம்பவத்தில் அதிக அச்சமடைந்த விஜித தேரர் பின்னர் செய்த முறைப்பாட்டினை அடுத்து வாக்கு மூலமொன்றினை பெற்றுக் கொள்வதற்கு பொதுபலசேனாவின் செயலாளரான தேரரை கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்தது ஒருவகை நாடகம் மட்டுமே. அவ்வாறு பெறப்படும் வாக்குமூலத்தின் மூலம் இடம்பெறும் விசாரணைகளுக்கு என்ன நடப்பதென்பதை நாம் நன்கு அறிவோம்.

ஜெனீவாவில் பதிலளித்து அரசாங்கம் முன்வைத்த சாட்சியத்தில் சிறுபான்மை மதத்தவர்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் மிக அபூர்வமாகவே இடம்பெறுகின்ற நிகழ்வுகளாகுமெனவும் அத்தாக்குதல்களோடு சம்பந்தப்பட்ட தகவல்கள் கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் அது சம்பந்தமாக விசாரணைகைள மேற்கொண்டு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் அங்கு கருத்துத் தெரிவித்த இலங்கை அரசாங்கம் அவ்வாறான அபூர்வமான சம்பவங்கள், பல இன்னல்களை, பல மதங்களை, பல கலாச்சாரங்களை கொண்ட எந்தவொரு நாட்டிலும் இடம்பெறக் கூடியதொன்றாகுமெனவும் அவ்வாறானதொரு நாடான இலங்கை சம்பந்தமாக அவ்வாறான விடயத்தினடிப்படையில் அநீதியான முறையில் தீர்மானமொன்றுக்கு வருவது தவிர்க்கப்பட வேண்டியதாகும் எனக் கூறியது.

எனினும் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை மறந்த நிலையில் உள்ள வெளிநாட்டமைச்சர் ஜீ.எல். பீரிசுக்கும் மிகவும் முறையில் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை அரசாங்கத்துக்கும் நினைவுபடுத்தக்கூடிய விடயதானங்கள், இலங்கையை மோசமான நிலைக்கு நகர்த்தக்கூடிய அடிப்படை விடயங்கள் பல உள்ளன. முதன்முதலாக மேலே குறிப்பிட்ட நிகழ்வு அபூர்வமாக இடம்பெற்ற நிகழ்வுகள் அல்ல. இவ்வாறான நிகழ்வுகளின் பின்னணியில் மிகத் தெளிவாக காணக்கூடிய மிகவும் பயங்கரமான அரசியல் மூலோபாயமொன்று உள்ளது. மிக உசிதமான சந்தர்பங்களில் திடீரென வெளிப்படும் இவை மீண்டும் இவை மீண்டும் தீடீரென மறைந்து விடுகின்றது.

அதேபோல் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடு செய்வதற்கு முற்படுவோர் ஒரு சிலர் மட்டுமே என்பதனால் சம்பந்தப்பட்ட விசாரணையை சிறப்பான முறையில் முற்றுக்பெறச் செய்வதற்கான சந்தர்ப்பம் கிட்டவில்லையென கூறுவது கேள்விக்கான சிறந்த பதிலாகாது. உண்மையை மூடி மறைக்கும் அவ்வாறான இளம் விளையாட்டுக்களால் இடம்பெறுவது, கேட்போர்களிடமுள்ள நம்பிக்கை கெட்டுவிடுவிக்கும் நிலையே இடம்பெறுகிறது. சட்டத்தை மீறுகின்ற எந்தவொரு நபர் சம்பந்தமாகவும் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமென்பது சட்டத்தின் பிரதான நிலையமாகும். பொதுபலசேனாவின் தலைமைக் காரர்களினால் இடம்பெறுகின்ற அச்சுறுத்தல்களை அவர்களது சண்டாள செயற்பாடுகளை அரசாங்கத்துக்கு தெளிவாக பார்க்கக் கூடியவாறு படமாக்கப்பட்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில் துணிச்சலான நபர்கள் சிலர் முன்வந்து சாட்சியமளித்த சந்தர்பங்களும் உள்ளன.

தண்டனை எவ்வாறானது?

விசாரணைகள் இன்னும் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவோ அல்லது சில விசாரணைக் முடிவடைந்துள்ளதாகவோ கூறுவது மட்டும் கேள்விக்கான பதிலாகாது. கேள்வியானது சட்டத்தை மீறியுள்ள இவர்களுக்கு இதுவரை வழங்கிய தண்டனை என்ன என்பதேயாகும். இவ்வாறான சம்பவங்களுக்குப் பொருத்தமாக தற்போது அமுலிலுள்ள சட்டங்களைக் கூட நிர்வாகிகள் மதிக்காத நிலையில், உண்மையான நகைச்சுவைக்காரனாக நடித்துக் கொண்டிருக்கும் வாசுதேவ நாணயக்கார அவர்கள் வெறிப்பாஷைக்குகெதிராக புதிய சட்டதிட்டங்களை கொண்டு வரவுள்ளதாக கற்பனைக்கதை கூறுவது உண்மையிலே கதையளப்பதாகும்.

இவ்வாறான மதவாத கடும்போக்கு சம்பவங்கள் சம்பந்தமான தகவல்கள் அதி முக்கியத்துவமளித்து வெளியிடப்பட்டு வருவதாக கூறுகின்ற ஒரு சிலரும் இருக்கின்றார்கள். இவ்வாறானவர்கள் செய்ய வேண்டியதென்னவெனில், ஒரு சில இணையத்தளங்களை மேலிருந்து கீழ்நோக்கிய வரை வாசித்துப் பார்ப்பதேயாகும். சிறுபான்மை மதத்தவர்களுக்கெதிராக பொதுபலசேனா மேற்கொண்ட அட்டகாசங்கள் மற்றும் அவற்றின் போது இவர்கள் பிரயோகித்த அருவருக்கத்தக்க மொழிப் பிரயோகம் சம்பந்தமாகவும் அப்போது இவர்கள் கண்டுகொள்ளக் கூடியதாகவிருக்கும் இக்குழுவினர் தற்போது எந்தளவுக்கு பிரபல்யமடைந்திருப்பதென்றால் அமைச்சரவை அமைச்சர்களுக்குக் கூட உடல்ரீதியான ஆபத்துக்களை ஏற்படுத்த பகிரங்க அச்சுறுத்தல் விடுக்கக் கூடியளவுக்கு இவர்கள் துணிந்திருக்கிறார்கள் என்பதுதான் மற்றொரு பிரச்சினையாகவுள்ளது.

கவலைக்குரிய விடயம்

இவ்வச்சுறுத்தல் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முழு உலகும் இதனை கண்டு கொள்ளக் கூடியவாறு பிரச்சாரப்படுத்தப்பட்டள்ளமையும் முக்கியமில்லை. உண்மையிலே இவ்வாறான சூழலில் மிகச்சிறிய அளவில் இவர்களது தலைவர்களது செயற்பாடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் ரூபவாஹினி அலைவரிசைகளது தயாரிப்பாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கக்கூடிய வலிமை இவர்களுக்குள்ளது. அவர்களுக்கேயுரித்தான ஆடையுடன் நடமாடக்கூடிய முஸ்லிம் பெண்களை அச்சுறுத்தக்கூடிய இயலுமையும் இவர்களிடமுள்ளது. தமக்கு எதிராகவுள்ள நடுநிலையான பௌத்த தேரர்களது (சிவ்ரை) அங்கியை கழற்றுவதற்கும் அச்சுறுத்துவதற்குக் கூடி இவர்களுக்கு முடியும். சில மாதங்களுக்கு முன் வட்டரக்க விஜித தேரர் பொருத்தமான கேள்வியொன்றை எழுப்பியிருந்தார். ‘அனைவரது துணிகளையும் அகற்றுவதற்கு இத்தேரர்மார்கள் இவ்வாறு போராடுவதேன் என்பது தனக்கு விளங்கவில்லை’.

சட்டவாக்கத்தின் தடையேதுமின்றி அவ்வாறான காலம் கடந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு பொதுபலசேவை இயலுமை பெற்றுள்ளது என்பதே உண்மையாகும். இவர்களது அச்சுறுத்தலுக்கு இலக்காகும் அமைச்சரவை அமைச்சர்கள் இவற்றுக்கு எந்தவித எதிர்ப்பையும் வெளிப்படுத்தாது தன்பாட்டில் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையிலேயே உள்ளனர். இன்று எமது அரசாளுமையின் கவலைக்குரிய நிலையும் அவ்வாறானதாகவே உள்ளது.

Related

Articles 2028816475234551201

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item