எங்கு பார்த்தாலும் மரண ஓலம் - உண்மை ஓர் அலசல்
http://newsweligama.blogspot.com/2014/07/blog-post_2625.html
உலகில் அனைத்து மதங்களுக்கும் தனக்கென்று ஒரு நாடு உள்ளது. யூதர்கள் மத கொள்கை படி அவர்கள் தான் உலகிலேயே உயர்ந்த மக்கள் என்று தம்பட்டம் அடித்து கொள்வார்கள்.
1947ம் ஆண்டுகளுக்கு முன்பு வரை யூதர்களுக்கு என்று ஒரு தனி நாடு கிடையாது. பல நூறு ஆண்டு காலமாக யூதர்களுக்கு தனிநாடு இல்லை என்ற ஏக்கம் அவர்களுக்கு இருந்தது.
யூதர்கள் அதிகள் இருந்த நாடு ஜெர்மனி. அங்கு வாழ்ந்த பூர்விக ஜெர்மனி மக்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள்.
ஆனால் அவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து நல்ல வசதியில் தலித்து வந்தனர் யூதர்கள்.
சிறுவயதில் இருந்தே ஹிட்லருக்கு யூதர்கள் மீது தொடர்ந்து வெறுப்பு இருந்தது(ஹிட்லர் தந்தை ஒரு யூதன் என்றும் அவருடைய அம்மாவை ஏமாற்றி விட்டு சென்றதாகவும் அதனாலே யூதர்கள் மீது ஹிட்லருக்கு கோவம் இருந்ததாகவும் வரலாறு சொல்கிறது).
ஜெர்மனி மக்களுக்கும் வெறுப்பு இருந்தது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஆட்சியை பிடித்தார் ஹிட்லர்.
தான் ஆட்சிக்கு வந்ததில் இருந்து யூதர்களை சாகடிக்க ஆரம்பித்தார், வித விதமாக சாகடித்தார், வீடு வீடாக சென்று மக்களை நேரில் பார்த்து அதில் யார் யூதர்கள் என்று கண்டுபிடித்து எப்படியெல்லாம் கொல்ல முடியுமோ அந்த விதத்தில் சாகடித்தார்.
ஹிட்லரிடம் இருந்து தப்பிக்க பல யூதர்கள் வெளியேற ஆரம்பித்தார்கள். அவர்கள் இடம் இல்லாமல் இருந்த பொழுது பாலஸ்தீன மக்கள் அன்புடன் தங்கள் நாட்டில் தங்கிக்கொள்ள அனுமதி கொடுத்தனர்.
யூதர்களுக்கு பாலஸ்தீனம் மிகவும் விரும்பிய இடமாக மாறியது(யூதர்களின் புனிதத்தலமான ஜெருசலம் அங்கு தான் இருந்தது).
உலகில் பல நாடுகளில் ஆங்காங்கே வாழ்ந்து வந்த யூதர்கள் பாலஸ்தீனம் நோக்கி படையெடுக்க ஆரம்பித்தார்கள். அப்பொழுது இரண்டாம் உலக போர் தொடங்கியது, அப்பொழுது யூதர்கள் பிரிட்டனுடன் ஒரு ஒப்பந்தம் போட்டுகொண்டனர்.
நாங்கள் உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குகிறோம். ஆனால் வெற்றி பெற்றவுடன் பாலஸ்தீன் நாட்டின் ஒரு பகுதியை எங்களுக்கு தரவேண்டும் என்று தான் அந்த ஒப்பந்தம்.
இரண்டாம் உலக போரில் அவர்கள் வெற்றி பெற்றவுடன் உலக ஏகாபத்திய நாடுகள் வலுக்கட்டாயமாக 2௦% இடத்தை இஸ்ரேல் என்ற யூதர்கள் நாடு உருவாக கொடுத்தது.
பாலஸ்தீனியர்கள் அவர்களுடை சொந்த மண்ணை மீட்க போர் செய்தார்கள். ஆனால் யூதர்களின் பின்னால் அமெரிக்கா உதவி செய்தது. அதன் பின்பு பாலஸ்தீனியர்கள் தோல்வி அடைந்தார்கள்.
அதை தொடர்ந்து சிறிது சிறிதாக அவர்கள் பாலஸ்தீன பகுதிகளை சுரண்ட ஆரம்பித்தார்கள். அவர்கள் சுரண்டல் போகி மீதி 10 % இடம் மட்டுமே பாலஸ்தீனியர்களிடம் உள்ளது, அந்த பகுதி தான் காசா.
அவர்கள் அந்த காசா பகுதியையும் கைப்பற்ற அவ்வப்போது தாக்குதல் நடத்துவார்கள்.
காசா மக்களுக்காக போராடி வரும் அமைப்பு தான் ஹமாஸ், உலக மீடியாக்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அவர்கள் சொல்வது தான் சட்டம்.
இன்றும் பல பத்திரிக்கைகள் ஹமாஸ் இயக்கத்தை தீவிரவாதிகள் என்று தான் சொல்கிறார்கள்.
அந்த அளவு அவர்களின் ஆதிக்கம் இருக்கிறது, பாலஸ்தீன நாடு மீண்டும் உருவாக்கி கூடாது என்பதற்காக குழந்தைகளை அதிகம் தாக்கி சாகடிக்கிறார்கள்.
இதன் மூலம் அவர்களின் சந்ததிகள் குறையும் என்பதே அவர்களுடைய நோக்கம்.