ஊவா தேர்தல்; விருப்பு இலக்கங்கள் 11ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளன
http://newsweligama.blogspot.com/2014/08/11.html
ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் அடுத்த வாரம் விநியோகிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.
விருப்பு இலக்கங்கள் தேர்தல்கள் செயலகத்தினால் பதுளை மற்றும் மொனராகலை மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை ஒப்படைக்கப்படவுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்