முடிந்தால் எம்முடன் மோதி வெல்லட்டும் - ஞானசார

காவி உடை­யினை அணிந்த­மை­யி­னா­லேயே அர­சாங்­கத்தில் இருக்கும் கய­வர்­களின் அட்­டூ­ழி­யங்­களை வெளிக்­கொண்டு வர முடி­கின்­றது. அமைச்சர் ராஜித சேனா­ரத்ன எவ்­வா­றான வழக்­கினை தொடர்ந்­தாலும் முகம் கொடுக்க தயார். முடிந்தால் எம்­முடன் மோதி அவர் வென்று காட்­டட்டும்  என சவால் விடும் கல­கொட அத்தே ஞான சார தேரர் இலங்கை ஒன்றும் சவூதி அரே­பியா அல்ல என்­பதை தவ்ஹீத் ஜமா அத்­தினர் நினைவில் வைத்து கொள்­வது நல்­லது எனவும் தெரி­வித்தார்.கடந்த சில தினங்­க­ளாக பொது­ப­ல­சேனா பௌத்த அமைப்­பி­ன­ருக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்டு வரும் செயற்­பா­டுகள் தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
 
கேள்வி :- தன்னை அவ­ம­தித்­த­மைக்­காக 10 மில்­லியன் நஷ்ட ஈடு கோரி அமைச்சர் ராஜித சேனா­ரத்ன  உங்­க­ளுக்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்­ய­வுள்­ள­தாக தெரி­வித்­துள்ளார். இதற்கு உங்­களின் பதில் என்ன?
 
பதில்: அமைச்சர் ராஜித சேனா­ரத்­ன­விற்கு வழக்கு தொடர்­வ­தற்­கான உரிமை உள்­ளது. அதில் எவ்­வித தடை­க­ளையும் எம்மால் விதிக்க முடி­யாது. எனினும் எமக்கு உரிமை உள்­ளது. இந்த நாட்டில் நடக்கும் அநி­யா­யங்­களை தட்டி கேட்­ப­தற்கு. அதையே நாம் செய்து வரு­கின்றோம். நாம் காவி­யு­டைய அணிந்த அடா­வ­டிக்­கா­ரர்கள் என அமைச்சர் ராஜித சொல்­கின்றார். நாம் காவி­யு­டை­யினை அணிந்­த­மை­யி­னா­லேயே இவர்கள் செய்யும் அட்­டூ­ழி­யங்­களை வெளிக்­கொண்டு வர முடி­கின்­றது. இந்த காவி இருப்­ப­த­னால்தான் எவ­ருக்கும் அஞ்­சாது செயற்­பட முடி­கின்­றது.
எமக்கு எதி­ராக அமைச்சர் வழக்கு தாக்கல் செய்­வது அவரின் உரிமை. அதேபோல் ராஜித செய்த ஊழல்கள் தொடர்­பி­லான அனைத்து ஆதா­ரங்­களும் எம்­மிடம் உள்­ளன. அவை அனைத்­தையும் நாம் முன் வைப்போம். அதேபோல் நாம் நியா­ய­மாக போரா­டு­கின்றோம். எனவே எம்­முடன் மோதி அவர்­களால் சாதிக்க முடி­யாது. முடி­யு­மானால் எம்­மி­ட­மி­ருந்து இவர்கள் ஒரு ரூபா­யேனும் பெற்­றுக்­காட்­டட்டும். அது அமைச்சர் ராஜித் சேனா­ரத்­ன­விற்கு நான் விடுக்கும் சவா­லாகும்.
 
கேள்வி : பொது­ப­ல­சேனா அமைப்­பினை தடை செய்து உங்­களை சட்­டத்தின் முன் நிறுத்த வேண்டும் என தவ்ஹித் ஜமாஅத் எனும் இஸ்லாம் அமைப்பு தெரி­வித்­துள்­ளது. இது தொடர்பில் உங்­களின் கருத்து என்ன?
 
பதில்: எமது இயக்­கத்தை தடை செய்து என்னை சட்­டத்தின் முன் நிறுத்த தவ்ஹித் ஜமா அத் அமைப்பு கோரிக்கை விடுக்க முன்னர் இவர்­களை கைது செய்ய வேண்டும். இலங்­கையில் முஸ்லிம் தீவி­ர­வா­த­மொன்று உரு­வா­வதே இவ்­இஸ்­லா­மிய அமைப்­பி­ன­ரால்தான். சிங்­கள பௌத்த இனத்­திற்கு அழிவு ஏற்­ப­டு­மென்றால் அது தவ்ஹித் ஜமா அத் அமைப்­பினால் தான் ஏற்­படும். அதற்கு முன்னர் அவர்­களை சட்­டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
 
இவர்­களின் நினைப்­பா­னது சவூதி அரே­பி­யாவின் இஸ்­லா­மிய கொள்­கை­யினை இலங்­கையில் பரப்பி இஸ்­லா­மிய தேச­மொன்­றினை உரு­வாக்க முடியும் என்­ப­தே­யாகும். நாம் ஒன்றை தெளி­வாக கூறு­கின்றோம். இலங்கை சவூதி அர­ஏ­பியா அல்ல என்­பதை. தவ்ஹித் ஜமா அத் அமைப்­பினர் நினைவில் வைத்­துக்­கொள்ள வேண்டும். அதேபோல் கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் இன­வாத குறுஞ்­செய்தி அனுப்பி இன முரண்­பாட்­டினை செய்ய முயற்­சித்­ததன் பின்­ன­ணியில் தவ்ஹீத் ஜமா அத்தை சேர்ந்த சிலர் இருக்­கின்­றனர் என்­பதே உண்மை. இவர்­களே முஸ்­லிம்­களை தூண்­டி­விட்டு கல­வ­ரத்தை உரு­வாக்க முயற்­சிக்­கின்­றனர்.
 
அளுத்­கம சம்­ப­வத்தின் பின்­ன­ணியில் இவர்கள் செயற்­பட்­டதன் காரணத்தினாலேயே சிங்கள முஸ்லிம் கலவரமொன்று உருவாக்கப்பட்டது. அதேபோல் இன்று இவர்கள் தொடர்ச்சியாக இவ்வாறான இன முரண்பாட்டினை உருவாக்க முயற்சிப்பார்களாக இருப்பின் நாமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நிலை உருவாகும் எனவும் தெரிவித்தார்.

Related

உள் நாடு 4901141594829445363

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item