ரந்தோலி பெரஹராவில் யானை குழப்பம் – 12 பேர் காயம்
http://newsweligama.blogspot.com/2014/08/12.html
கண்டியில் நடைபெற்று வரும் ரந்தோலி பெரஹராவின் இரண்டாவது நாள் பெரஹரா ஊர்வலத்தின் போது யானை ஒன்று திடீர் என குழப்பம் விளைவித்ததில் யானை பாகன் உட்பட 12 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
பெரஹரா ஊர்வலம் வீதி வழியாக சென்று மீண்டும் தலாதா மாளிகைக்கு செல்லும் வழியில் இராஜ வீதி தேவ வீதி சந்தியில் வைத்தே யானை ஒன்று திடீர் என குழப்பம் விளைவித்துள்ளது.
இதனால் யானை பாகன் நடனகாரர்கள் கர்ப்பிணி பெண் ஒருவர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து பேராதனை மிருக வைத்தியசாலை வைத்தியர் அழைக்கப்பட்டு யானைக்கு மருந்தேற்றப்பட்டதையடுத்து நிலைமை சுமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.