அக்கரைப்பற்றில் வாள்வெட்டுக்கு இலக்கான 9 பேர் வைத்தியசாலையில் அனுமதி

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் வாள்வெட்டுக்கு இலக்கான 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு 10.30 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
வாள்வெட்டுக்கு இலக்கான ஆறு ஆண்களும் மூன்று பெண்களும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாகவே வாள்வெட்டு சம்பவம் டெம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

உள் நாடு 204243381079651871

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item