தவ்ஹீத் ஜமாஅத், பொது பல சேனா ஆர்ப்பாட்டங்களுக்கு தடை உத்தரவு
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_999.html
தவ்ஹீத் ஜமாஅத், பொது பல சேனா மற்றும் சிங்கள ராவய அமைப்புக்களுக்கு நாளைய தினம் புறக்கோட்டையில் எந்த ஒரு ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொள்வதற்கு கோட்டை நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாளை பிற்பகல் 12 மணியளவில் மருதானையில் பொது பல சேனா அமைப்பும், பிற்பகல் 1 மணியளவில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பும் மாளிகாவத்தை முதல் புறக்கோட்டை வரையும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்த திட்டமிட்டிருந்தது.
இந்நிலையிலேயே மேற்குறித்த அமைப்புக்களுக்கு நாளைய தினம் எந்த ஒரு ஆர்ப்பாட்டங்களை நடாத்துவதற்கு கோட்டை நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.