காணாமல் போனோர் விவகாரம் ; 20 ஆயிரம் முறைப்பாடுகள்
http://newsweligama.blogspot.com/2014/08/20_18.html
காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை சுமார் 20,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இவாணைக்குழுவினால் ஆறு கட்டங்களில் முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, இறுதியாக கடந்த 8ம் திகதி முதல் 11ம் திகதி வரை மன்னாரில் இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றன. இதன்போது 187 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுமிருந்தன.
அத்துடன் இவ்வருடம் ஜனவரி மாதம் கிளிநொச்சியிலும் பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்திலும் மார்ச் மாதம் மட்டக்களப்பிலும் , ஜூன் மாதம் முல்லைத்தீவிலும் ஜூலை மாதம் மீண்டும் மட்டக்களப்பிலும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன