உயர்தரப் பரீட்சை ஆரம்பம்; நோக்குனர்கள் உதவி புரிவதாக முறைப்பாடு
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_15.html
கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின்போது மோசடியில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பரீ்ட்சைகள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
சில பகுதிகளில் பரீட்சார்த்திகளுக்கு நோக்குனர்கள் உதவி புரிவதாக ஏற்கனவே முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, பரீட்சை மோசடிகள் மற்றும் பரீட்சையுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து முறையிடுவதற்காக 24 மணித்தியாலங்களும் இயங்கும் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் குறிப்பிட்டார்.