எமது நாட்டில் உள்ளது அமைச்சரவை அல்ல; அது ஒரு பன்றித் தொழுவம் - ஞானசார
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_46.html
பொது பல சேனா நோர்வே நாட்டிடம் இருந்து நிதி உதவி பெற்றுள்ளது என முடியுமானால் நிரூபிக்கும் படி அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஞானசார தேரர் இந்த சவாலை முன்வைத்தார். ராஜித சேனாரத்ன எது வித அடிப்படையும் இன்றி தம்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக அவர் கூறினார்.
"நாம் ராஜிதவுக்கு சவால் விடுக்கின்றோம்... இவர் வெள்ளை நிறத்தில் அணிந்து அழகாக் இருக்கும் யானைக் கள்வன்...இவர் ஒரு குற்றவாளி.. இவர் ஒரு தக்கடியன்.. இவர்கள் போன்றவர்களில் இருந்து இந்த நாட்டின் அரசியலை தூய்மை செய்ய வேண்டும்.. அவர் நாம் நோர்வேயிடம் இருந்து நிதியுதவி பெற்றதாகக் கூறியுள்ளார்...
டொலர்களிலா... யூரோகளிலாஅ அல்லது பவும்களிலா நாம் நிதியுதவி பெற்றோம்? நாம் அந்தப் பணத்தை எங்கு போய் மாற்றினோம்? அந்தப் பணம் எதற்காகச் செலவளிக்கப்பட்டது. குற்றம் சுமத்த முன் முடியுமானால் இவற்றுக்கு பதில் கூற வேண்டும்..
எமது அமைச்சரவையும் எமக்கு ஒரு பன்றித் தொழுவம் போன்றே தெரிகின்றது.. பெரும்பாலானோர் கழிவுகளைத் தின்று விட்டு சிங்கங்களுக்கு சவால் விடுக்கின்றனர். முடியுமானால் விவாதத்துக்கு வரவும்.. இவ்வாறு கழிவுகளை உண்ணும் பன்றிகளுடன் நாம் மோத விரும்பவில்லை..
நாம் பொறுப்புடன் கூறுகிறோம்.. இந்த நாட்டிலுள்ள எந்த ஒரு அரசியல் வாதியிடமும் நாம் ஒரு ரூபா கூட பெறவில்லை.. அவ்வாறு பெருவதும் இல்லை."
என்று அவர் மேலும் கூறினார்.
பன்றித் தொழுவத்தில்தானா அமைச்சரவை நடககின்றது! அல்லது அமைசசரவையே பன்றித் தொழுவம் ஆகிவிட்டதா! அல்லது அமைச்சர்கள் பன்றிகள் என்கின்றாரா!
ReplyDelete