அஷ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலை விவகாரம் - முறைப்படுகள் கிடைத்தால் விசாரணை
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_220.html
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தாதியர்கள் நோயாளிகளிடம் அவதூறான வார்த்தைகள் பயன்படுத்துவதாக முறைப்பாடு செய்தால் விசாரணை மேற்கொள்ளப்படும் என வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரான டாக்டர் ஏ.எல்.எம்.நசீர் தெரிவித்தார்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் இதுவரை எவரும் தனக்கு முறையிடவில்லை என அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு சம்பவங்கள் எதுவும் நடைபெற்றமை குறித்து எனக்கு எழுத்து மூலமோ அல்லது நேரடியாகவோ என்னை சந்தித்து முறையிட்டால், நிச்சயமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் தராதரமின்றில் தண்டிக்கப்படுவர் என வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு பிரசவத்துக்காக செல்லும் தாய்மார்களிடம் பிரசவத் தருவாயில் அங்கு பணிபுரியும் பெண் தாதியர்கள் மோசமான வார்த்தைகளினால் திட்டுவதாக இணையத்தளங்களிலும் முகநூலிலும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நசீரை தொடர்புகொண்டு வினவியது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
"இந்த சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது. எனினும் வைத்தியசாலையின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலர் குறித்த விடயம் தொடர்பில் இணையத்தளங்களிலும் முகநூலிலும் செய்தி வெளியிட்டுள்ளனர். குறித்த செய்தியினை வெளியிடுவதற்கு முன்னர் என்னிடம் இது தொடர்பாக அவர்கள் முறையிட்டிருக்க வேண்டும். அவ்வாறு முறையிட்டிருந்தால் நான் நிச்சயம் விசாரணை மேற்கொண்டிருப்பேன்.
அதனை விடுத்து வைத்தியசாலையின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம். கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு பிரசவத்துக்காக செல்லும் தாய்மார்களிடம் பிரசவத் தருவாயில் அங்கு பணிபுரியும் பெண் தாதியர்கள் மோசமான வார்த்தைகளினால் திட்டுவதாக இந்த நிமிடம் வரை எந்தவொரு நோயாளியோ அல்லது அவரது உறவினர்களோ என்னிடம் முறையிடு செய்யவில்லை.
அவ்வாறு அவர்கள் முறையிடு செய்திருந்தால் நிச்சயம் விசாரணை செய்து குற்றவாளிகள் தராதரமின்றில் தண்டிக்கப்படுவர். எந்தவித முறைப்பாடுகளுமின்றி என்னால் விசாரணைகளை மேற்கொள்ள முடியாது.
இந்த விடயம் தொடர்பில் நாளை முறைப்பாடு செய்தாலும் கூட விசாரணைகள் ஆரம்பிக்கப்படும். எந்தவித முறைப்பாடுகளுமின்றி ஊடகங்கள் மூலம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்த வேண்டாம்" என்றார். - Vidiyal
தொடர்புபட்ட செய்தி: http://www.weligamanews.com/2014/08/blog-post_679.html
தொடர்புபட்ட செய்தி: http://www.weligamanews.com/2014/08/blog-post_679.html