சீ.டி விற்கும் பாணியில் பாபுல் விற்றவர் கைது
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_229.html
சீ.டி விற்கும் பாணியில் பாபுல் என்கின்ற போதைப் பொருளை விற்ற ஒருவரை முந்தலம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த விற்பனை நிலையத்தை முற்றுகையிட்ட போது அங்கிருந்த 4 கிலோ பாபுல் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
குறித்த கடை பாடசாலை ஒன்றுக்கு அருகில் அமைந்துள்ளதால் சந்தேக நபர் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டே இவ்வியாபாரத்தை செய்துள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது.