அழகுக் கலை நிலையங்களில் பாவனைக்குதவாத அலங்கார பொருட்கள் கண்டெடுப்பு
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_747.html
நாட்டிலுள்ள அழகுக் கலை நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் பாவனைக்குதவாத அலங்கார பொருட்கள், மருந்துகள் கண்டெடுக்கப்பட்டதாக வாசனைத் திரவியங்கள் மற்றும் ஒளடதங்கள் அதிகார சபை தெரிவிக்கின்றது.
அவ்வாறான நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அதிகார சபையின் பணிப்பாளரும், சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளருமான அமல் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.
பம்பலப்பிட்டியில் அண்மையில் அழகுக் கலை நிலையமொன்றில் வழங்கப்பட்ட ஊசியினால் பெண்ணொருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த சோதனை நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக அமல் ஹர்ஷ டி சில்வா கூறினார்.
வாசனைத் திரவியங்கள் மற்றும் ஔடதங்கள் அதிகார சபையின் அனுமதிப் பத்திரமின்றி சில அழகுக் கலை நிலையங்கள் இயங்கிவருவதாகவும், அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அதிகார சபையின் பணிப்பாளர் குறிப்பிட்டார்