பொத்துவில் பிராந்தியத்துக்கான உப வலயக்கல்வி அலுவலகம் நாளை திறந்து வைக்கப்படும்

பொத்துவில் பிராந்தியத்துக்கான சகல வசதிகளும் கொண்ட தனியான உப வலயக்கல்வி அலுவலகம் நாளை 12ம் திகதி செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டவுள்ளதாக பொத்துவில் பிரதேச சபை உறுப்பினரும் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் இணைப்புச்செயளாலருமான ஏ.பதூர்கான் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

பொத்துவில் தொகுதி சுதந்திர கட்சி அமைப்பாளர் ஏ.அப்துல் மஜீதீன் அழைப்பின் பெரில் உப வலயக்கல்வி அலுவலகத்தை தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டு வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளார்.

விசேட அதிதிகளான கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்கஎம்.ஐ. மன்சூர் உட்பட மாகாண சபை உறுப்பினர்களும் கல்வி திணைக்கள உயரதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

நீண்ட காலமாக பொத்துவில் பிரதேசத்தில் எதிர்நோக்கி வந்த ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பௌதீக வள பற்றாக்குறை என்பன தீர்க்கப்படவுள்ளது. இவ் உப வலக்கல்வி அலுவலக நிர்வாகத்தின் கீழ் 19 பாடசாலைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

(எம்.ஜே.எம். முஜாஹித்)

Related

உள் நாடு 6295141377552639307

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item