ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் சந்திரிகாவுக்கும் சட்டச் சிக்கல் !! வோட்டர் எட்ஜ் முறைகேடு
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_976.html
வோட்டர் எட்ஜ் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குற்றவாளியாக காணப்பட்டமையால், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிடுவதில் சிக்கல்கள் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுஜனாதிபதி பதவியில் இருந்த காலத்தில் வோட்டர் எட்ஜ் ஹோட்டலுக்கு சொந்த காணியில் முறைகேடு இடம்பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், சந்திரிகா குமாரதுங்க குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, அதற்காக அபராதமும் செலுத்தினார்.
இந்தநிலையில் அவர் தேர்தல் ஒன்றில் போட்டியிடுவதில் சட்டசிக்கல் உள்ளமையை அரசியல் தரப்புக்கள் கோடிட்டு காட்டியுள்ளன.
குறித்த வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டதன் மூலம் சந்திரிகா இலங்கையின் அரசியல் அமைப்பை மீறினார் என்ற அர்த்தம் ஏற்பட்டுள்ளது என்றும் அரசியல் தரப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.