கெஹலிய தன்னைச் சுட்டதாக மஹிந்தானந்த குற்றச்சாட்டு
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_624.html
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றம் சாட்டியுள்ளார்.
தொலைக்காட்சி விவாதமொன்றிலேயே அவர் இவ்விடயத்தை பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறார்.
ஐ.தே.க.அதிகாரத்தில் இருந்த 2002-2004 காலப்பகுதியில் நாவலப்பிட்டியில் தான் தேர்தல் நடவடிக்கையொன்றில் ஈடுபட்டிருந்தபோதே இச்சம்பவம் நடைபெற்றதாக அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.