இரட்டை நிலைப்பாடு கூடாது – ஜனாதிபதி அறிவுறுத்தல்

சர்வதேச மற்றும் தேசிய சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது நிலையான தன்மை பின்பற்றப்பட வேண்டும் எனவும்.சட்டத்தை அமுல்படுத்தும்போது இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றக் கூடாது எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விடயம், நீதிமன்றம் மற்றும் சர்வதேச அமைப்புக்களுக்கு பொருந்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தெற்காசிய நீதித்துறையில் சுற்றுசூழல் நீதி  தொடர்பான வட்டமேசை மாநாடு மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது,அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதேவேளை, தேசிய நிர்மாண சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “நிர்மாணம் 2014” என்ற வர்த்தக கண்காட்சி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டப சிரிமாவோ பண்டாரநாயக்க வளாகத்திலேயே இந்த வர்த்தக கண்காட்சி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை, சீனா, கொரியா, மலேஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் நிர்மாண துறையாளர்களின் படைப்புக்கள் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

உள் நாடு 2201491257023461111

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item