ஐ.நா.விசாரணைக்கு ஒத்துழைக்க பான் கீ மூன் வலியுறுத்து
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_715.html
இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றம் தொடர்பில் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீண்டும்கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனை, பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீபன் ஜாரிக் உறுதி செய்துள்ளார்.
இலங்கையில் மேற்படி விசாரணைகள் நடத்தப்படும் பட்சத்தில் அதன் மூலம் அங்கு நல்லிணக்கத்துக்கு வழியேற்படுத்தப்படும். எனவே அதற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.