குடு நுவானை தடுத்து வைத்து விசாரணை செய்ய நிதிமன்றம் அனுமதி
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_716.html
கைது செய்யப்பட்டுள்ள குடு நுவன் எனப்படும் நுவன் உதய குணதிலக்கவை ஆறு நாட்களுக்கு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறினார்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறினார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்த கருத்து:-
“ஆறு நாட்களுக்கு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளோம். தொடர்ந்து நாம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம். குறிப்பாக அவர் எங்கிருந்து போதைப் பொருட்களைப் பெற்றுக் கொண்டார் மற்றும் அவர் யாருக்கு அதனை விநியோகிக்க தயாராக இருந்தார் போன்ற விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்கின்றோம்.அவரது வீட்டில் இருந்து 40 மீற்றர் தொலைவில் உள்ள வீதிக்கு அருகில் வைத்தே குடு நுவன் கைது செய்யப்பட்டார். அவ்வேளையில் அவரிடம் இருந்த போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.”