தாய்லாந்தின் புதிய பிரதமராக இராணுவத் தளபதி தெரிவு
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_719.html
தாய்லாந்தின் புதிய பிரதமராக அந்நாட்டு இராணுவ ஆட்சியாளர் ஜெனரல் பிரயுத் சான் ஓசா (60 வயது) தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
தாய்லாந்து தேசிய அசெம்பிளியில் இன்று (21) காலை மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில்,தனி ஒரு வேட்பாளராக நின்று 172 உறுப்பினர்களின் ஆதரவைப்பெற்றே இவர் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டிருப்பதோடு,பதவியேற்பு தொடர்பில் இவர் தாய்லாந்து அரசரின் அனுமதிக்காகக் காத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பிரதமர் யின்லக் சின்வத்ராவை கடந்த மே மாதம் 22ஆம் திகதி நீதிமன்றின் ஊடாக பதவி கவிழ்த்தே இவர் தாய்லாந்தில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.