மஹியங்கனைக்கு STF பாதுகாப்பு
http://newsweligama.blogspot.com/2014/08/stf.html
ஊவா மாகாண சபைத் தேர்தல் முடியும் வரை மஹியங்கனைக்கு பாதுகாப்பு வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் பொலிஸாரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது பற்றிக் கருத்துத் தெரிவித்த பிரதித் தேர்தல்கள் ஆணையாளரான எம்.எம். மொஹமட்,
"நேற்று தேர்தல்கள் ஆணையாளருடன் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் பொலிஸாருடனும் நடந்த சந்திப்பின் போது ஏற்கனவே மஹியங்கனைப் பிரதேசத்தில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து இம்முடிவு எடுக்கப்பட்டது. பொலிஸ் பாதுகாப்புக்கு மேலதிகமாக விஷேட அதிரடிப்படையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்த பொலிஸார் ஒப்புக்கொண்டனர்" எனத் தெரிவித்தார்.
உவா மாகாண சபைத் தேர்தல் செப்டம்பர் மாதம் 20ம் திகதி நடைபெற உள்ளது.