ஓய்வூதியப் பண மோசடி குறித்து ஆராய விஷேட பொலிஸ் குழு
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_952.html
அரச ஊழியர்களின் ஓய்வூதியப் பணத்தை மோசடி செய்தவர்களைக் கைது செய்ய விஷேட பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அலுவலர்கள் குழு ஒன்றே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
2009ம் ஆண்டில் இருந்து இதுவரை இவ்வாறு ஓய்வூதியப் பணத்தை மோசடி செய்தவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் இவ்வாறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் ஓய்வூதியப் பணத்திற்குப் பொறுப்பாக இருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 2 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகைப் பணத்தை மோசடி செய்துள்ளனர்.
இவ்வாறு ஓய்வூதியப் பணத்தை மோசடி செய்வோர் இருப்பின் 011 2 320 141 என்ற இலக்கத்துக்கு அறிவிக்குமாறு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.