ஹோகந்தர விமான விபத்தில் நால்வர் பலி (படங்கள்)
http://newsweligama.blogspot.com/2014/12/blog-post_77.html
அத்துருகிரிய, ஹோகந்தர வானகுரு மாவத்தையை அண்டிய பகுதியில் இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் நால்வர் ஸ்தலத்திலேயெ உயிரிழந்துள்ளனர்.
இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான ஏ.என்.32 என்ற சிறிய ரக பயணிகள் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக விமானப்படை அதிகாரி கிஹான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை 6.35 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. கடைசியாக விமானக் கட்டுப்பாட்டறையைத் தொடர்பு கொண்ட விமானி பனிமூட்டம் காரணமாக ரத்மலானை விமான நிலையத்தினை அடைந்து கொள்வது கடினமாக உள்ளதாக அறிவித்துள்ளார்.