அட்டாளைச்சேனை அந்நூர் மைதானத்துக்கு பார்வையாளர் மண்டபம்
http://newsweligama.blogspot.com/2014/10/blog-post_23.html
அட்டாளைச்சேனை அந் - நூர் மகா வித்தியாலயத்தில் உள்ள விளையாட்டு மைதானத்துக்கு மிக நீண்ட காலத் தேவையாக இருந்துவந்த பார்வையாளர் அரங்கம் அமைப்பதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ், ஆகியோர் அங்கு விஜயம் செய்தனர்.
பாடசாலை அதிபர் ஏ.இத்ரீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சுமார் 2000 மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலையின் முகப்புத்தோற்றத்தில் அமைந்துள்ள இம்மைதானம் மாணவர்களின் விளையாட்டுத்துறைக்கு முக்கிய தேவையாக இருந்து வருவதுடன் அட்டாளைச்சேனை கோணாவத்தைக்கிராமத்தில் விளையாட்டு மைதானம் ஒன்று அமைந்துள்ளது என்ற பெருமையையும் கொண்டுள்ளது.
இம்மைதானத்துக்காக பொருளாதார அமைச்சின் கமநெகும திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸின் கோரிக்கைக்கு அமைவாக பார்வையாளர் மண்டபத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டு அந்நிதியில் பார்வையாளர் மண்டபத்தின் முதற்கட்ட வேலையை ஆரம்பிக்க இருக்கும் இடத்தினை பார்வையிடுவதற்கு சென்றிருந்தனர்.