Breaking News: மீரியபெத்த தோட்டத்தில் மண் சரிவில் 400 பேர் புதையுண்டுள்ளதாக சந்தேகம்
http://newsweligama.blogspot.com/2014/10/breakingnews-400.html
கொஸ்லந்தை மீரியபெத்த தோட்டப்பகுதியில் எற்பட்ட மண் சரிவில் 8 வீட்டு வரிசைகள் முற்றாகப் புதையுண்டுள்ளன. அதில் சுமார் 100வீடுகள் இருந்ததாகக் கூறப்படுகின்றது.
இன்று காலை 7 மணியளவில் நடந்த இம்மண் சரிவினால் அங்கு வசித்தவர்கள் பெரும்பாலானோர் புதையுண்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் இருந்து உயிர் பிழைத்த ஒருவர் அங்கு சுமார் 400 பேர் புதைந்துள்ளதாகத் தெரிவித்தார்.